உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் நாசம்

சாலை தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றி எரிந்த கார் நாசம்

சேலம் : சேலம், கன்னங்குறிச்சியை சேர்நதவர் வருண்குமார். திருமண விழா ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் அவர், நண்பர்கள் பிரபு, லோகேஷ், ஆகாஷ் ஆகியோர், சேலத்தில் உள்ள திருமண நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை கவனித்தனர். தொடர்ந்து, 4 பேரும், அன்றிரவு, 11:30 மணிக்கு, 'கியா' கார் மூலம், கன்னங்குறிச்சி புறப்பட்டனர்.அஸ்தம்பட்டி அம்மா உணவகம் அருகே சென்றபோது, சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி, தீப்பிடித்து எரியத்தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த, 4 பேரும் உடனே எகிறி குதித்து லேசான காயத்துடன் தப்பினர். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்து, காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். கார் முழுதும் எரிந்து நாசமானது. லேசாக காயம் அடைந்த, 4 பேரையும், தீயணைப்பு வீரர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ