சரக்கு ரயிலில் அடிபட்டு தச்சுத்தொழிலாளி பலி
ஆத்துார், :நரசிங்கபுரம், தெற்கு காட்டை சேர்ந்தவர் சின்னதம்பி, 51. தச்சுத்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இரவு, 9:00 மணிக்கு, ஆத்துார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து விருதாசலம் நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு, சின்னதம்பி உயிரிழந்தார். ஆத்துார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.