உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகளை தாக்கிய புகார் இல்ல பொறுப்பாளர் மீது வழக்கு

குழந்தைகளை தாக்கிய புகார் இல்ல பொறுப்பாளர் மீது வழக்கு

சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் தனியார் குழந்தைகள் இல்ல பொறுப்-பாளராக பெஞ்சமின் சூர்யா உள்ளார். அங்கு குழந்தைகள் தாக்-கப்படுவதாக புகார் எழுந்தால், மாவட்ட குழந்தைகள் நல அலு-வலர், நேற்று முன்தினம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், 'குழந்தைகள் இல்லத்தில் உள்ள, 22 குழந்தைகளை பைப்பால் தாக்கி துன்புறுத்துவதோடு, நல்ல உணவு வழங்கவில்லை. கழிப்பறைகளை சுத்தம் செய்ய வலியு-றுத்துவதால், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார். இதையடுத்து விசாரித்த போலீசார், அதன் பொறுப்-பாளர் பெஞ்சமின் சூர்யா மீது வழக்குப்பதிந்தனர். மேலும், 22 குழந்தைகளை பாதுகாப்பு கருதி, நேசக்கரங்கள் குழந்தைகள் இல்லம், அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.மண் கடத்திய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் பெத்தநாயக்கன்பாளையம், மார்ச் 31பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தப்படுவதாக, மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த இடையப்பட்டி ஊராட்சி காந்தி நகரில், மண் கடத்துவதை அறிந்த மக்கள், நேற்று மதியம், அங்கு சென்று, 2 பொக்லைன், 3 டிராக்டரை சிறைபிடித்து, கடத்தல்காரர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் வந்து, 5 வாகனங்களையும் பறிமுதல் செய்து, ஏத்தாப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி