உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏலச்சீட்டு நடத்தி மோசடி தாய், மகள் மீது வழக்கு

ஏலச்சீட்டு நடத்தி மோசடி தாய், மகள் மீது வழக்கு

கரூர், ;கரூர் அருகே, ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்ததாக தாய், மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் இ.பி., காலனி பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது மனைவி லட்சுமி, 44. இவர் அதே பகுதியை சேர்ந்த சித்ரா, 47, என்பவருக்கு ஆறு லட்ச ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். மேலும், ஆறு லட்சத்து, 78 ஆயிரத்து, 100 ரூபாயை சித்ரா நடத்தி வந்த, ஏலச்சீட்டுக்காக லட்சுமி முதலீடு செய்துள்ளார். ஆனால், எட்டு மாதங்களுக்கு பிறகு, ஏலச்சீட்டு நடத்துவதை சித்ரா கைவிட்டார்.இதனால் கடன் தொகை, ஏலச்சீட்டு முதலீடு மற்றும் வட்டி உள்பட, 13 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை லட்சுமி, சித்ராவிடம் திரும்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கான செக்கை சித்ரா, லட்சுமிக்கு வழங்கியுள்ளார். ஆனால், சித்ராவின் எஸ்.பி.,வங்கி கணக்கில் பணம் இல்லாததால், செக் பவுன்ஸ் ஆனது. இதையடுத்து கடந்த, 12ல் லட்சுமி, சித்ரா வீட்டுக்கு சென்று, பணத்தை கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சித்ரா, அவரது மகள் கிருபாஸ்ரீ, 27, ஆகியோர் லட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, லட்சுமி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சித்ரா, அவரது மகள் கிருபாஸ்ரீ ஆகியோர் மீது, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை