உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறையில் உள்ள டிவியை உடைத்த கைதி மீது வழக்கு

சிறையில் உள்ள டிவியை உடைத்த கைதி மீது வழக்கு

சேலம் :சேலம் மாவட்டம், வீரபாண்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோபிநாத், 38. இவரை மல்லுார் பகுதியில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த வழக்கில், கடந்த, 9ல் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை என்பதால் சிறையில் உள்ள 'டிவி'யில் கைதிகள் சினிமா பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோபிநாத், திடீரென சுதந்திரம் இல்லை என கூறி, 'டிவி'யை கையில் எடுத்து கீழே போட்டு உடைத்தார். உடனே சிறை காவலர்கள், கோபிநாத்தை அவரது அறையில் அடைத்தனர்.கோபிநாத் மீது, அஸ்தம்பட்டி போலீசில் சிறை அதிகாரிகள் கொடுத்த புகார்படி, விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கம் ஐ.எம்.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கேயும் இது போல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மத்திய சிறையில் 'டிவி'யை உடைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ