மேலும் செய்திகள்
90 பேர் மீது வழக்கு
06-May-2025
கல்லுாரி மாணவியை கரம்பிடித்த தொழிலாளி
27-Apr-2025
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியில், தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் அங்கு பானிபூரி கடை வைத்திருந்த, பீகாரை சேர்ந்த தம்பதியரிடம், வேறு இடத்தில் கடை போடுங்கள் என, மொரம்புக்காட்டை சேர்ந்த, தி.மு.க., ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், 29, கூறினார்.இந்நிலையில் ஒரு வாரத்துக்கு பின் மீண்டும் அங்கிருந்த கடையை அருள்குமாரும், அவரது நண்பர் குணாநிதியும், 'தள்ளி போட மாட்டீர்களா' என கேட்டனர். அப்போது அங்கு வந்த நத்தியாம்பட்டியை சேர்ந்த தேவராஜ், 42, பெரியசாமி, 32, 'ஏன் கடையை தள்ளி போட வேண்டும்' என கேட்டனர். தேவராஜ், அங்கிருந்த முதல்வர் பதாகைகளை கிழித்தார். தொடர்ந்து அருள்குமார், குணாநிதியை, நத்தியாம்பட்டியை சேர்ந்த இருவரும் தாக்கினர். இதுகுறித்து அருள்குமார் புகார்படி, தேவராஜ், பெரியசாமி மீது தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
06-May-2025
27-Apr-2025