உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

போக்சோ சட்டத்தில் தொழிலாளி மீது வழக்கு

மேட்டூர்: கொளத்துார், கண்ணாமூச்சியை சேர்ந்த தொழிலாளி தேவராஜ், 25. பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், கடந்த ஆண்டு, இரு தரப்பு பெற்றோருக்கும் தெரியாமல், 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு, வேலைக்கு சென்றுவிட்டார். பணி முடிந்து, ஊருக்கு செல்லும்போது சிறுமியை தனியே அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமி கொடுத்த புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ' சட்டத்தில் தேவராஜ் மீது வழக்கு பதிந்து அவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !