உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பாரத மாதா கோவில் எனபெயர் மாற்றாவிடில் வழக்கு

பாரத மாதா கோவில் எனபெயர் மாற்றாவிடில் வழக்கு

சேலம்:பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:தர்மபுரி, பாப்பாரப்பட்டி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரத மாதா கோவில், வழிபாட்டு தலம் அல்ல எனக்கூறி, தமிழக அரசு, 2021 ஆக., 11ல் பூட்டிவிட்டது. நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, 2022 ஆக.,11ல், மத்திய அரசு அரசாணை வெளியிட்டு, நாடு முழுதும் தியாகிகள் நினைவிடம் திறக்கப்பட்டது. நாங்கள் பாரத மாதாவுக்கு மரியாதை செலுத்தினோம். தி.மு.க., அரசு, எங்கள் மீது வழக்குப்பதிந்து, நான் உள்பட, 11 பேரை கைது செய்தது. உயர்நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றோம். 'கோவில் பூட்டை உடைத்து விட்டோம். தாழ்ப்பாள் சேதமாகி, 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, எங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறி, 11 பேரையும் நீதிமன்றம் விடுவித்தது. பாரத மாதாவுக்கு நினைவாலயம் என அழைப்பது தவறு. இறந்தவர்களுக்கு தான் நினைவாலயம். அதனால், 'பாரதமாதா கோவில்' என பெயர் மாற்ற வேண்டும். இல்லையெனில் தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை