உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை முயற்சி வழக்கு; மேலும் 2 பேர் கைது

கொலை முயற்சி வழக்கு; மேலும் 2 பேர் கைது

வாழப்பாடி: வாழப்பாடி, மன்னாய்க்கன்பட்டி அருகே வடக்குகாட்டை சேர்ந்தவர்கள் சுந்தர்ராஜன், 34, நந்தினி, 28. இருவரும், 3 ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஓராண்டாக கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். இதற்கு மாமியார் கல்யாணி தான் காரணம் எனக்கூறி அவரிடம், கடந்த ஆக., 12ல் சுந்தரராஜன் தகராறில் ஈடுபட்டார். அப்போது இரும்பு கம்பியால் நந்தினியையும், கல்யாணியையும் தாக்கியுள்ளார். இருவரும் படுகாயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுந்தரராஜன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து, வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சுந்தரராஜனுடன் இருந்ததாக, அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பூபதி, 24, சிங்கிபுரம் மணிகண்டன், 25, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி