உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு

மத்திய பட்ஜெட் நகல் எரிப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில், விவசாய சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்-தது. மாவட்ட தலைவர் அன்பு, செயலர் செல்வராஜ் தலைமை வகித்தனர்.அதில் இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன், ஐக்கிய விவசாய முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து விவசாயம், தொழிலாளர்க-ளுக்கு எதிரான பட்ஜெட் என கோஷமிட்டு அதன் நகலை எரித்-தனர். பின் கலைந்து சென்றனர்.அதேபோல் ஆத்துார், பழைய பஸ் ஸ்டாண்ட் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மா.கம்யூ., வட்ட குழு தலைவர் கலைமணி தலைமையில் பலர், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி, பட்ஜெட் நகலை எரித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ