உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரூர் வழித்தட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கரூர் வழித்தட ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சேலம்: கரூர் வழித்தடத்தில், இன்று ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் அருகில், குளித்தலை-பெட்டைவாய்த்தலை ஸ்டேஷன்களுக்கு இடையே, சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளதால், இன்று அவ்வழியே செல்லும் ரயில்களில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, சேலம்-மயிலாடுதுறை ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மயிலாடுதுறை-சேலம் ரயில், கரூரிலிருந்து மாலை, 4:30 மணிக்கு புறப்படும். இரு ரயில்களிலும், கரூர் முதல் மயிலாடுதுறை வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்சி ரயில், திருச்சி-பாலக்காடு ரயில் ஆகியவையும், கரூர் முதல் திருச்சி வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-ஈரோடு ரயில், 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை