உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மும்பை-கோவை எக்ஸ்பிரஸ் வழித்தட இயக்கத்தில் மாற்றம்

மும்பை-கோவை எக்ஸ்பிரஸ் வழித்தட இயக்கத்தில் மாற்றம்

சேலம்: மும்பை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில், வழித்தடத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெங்களூரு பையப்பனஹள்ளி வழித்தடத்தில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால், நவ., 18 முதல், 28 வரை மும்பை எல்.டி.டி., -கோவை எக்ஸ்பிரஸ் ரயில், யஸ்வந்த்பூர், பனஸ்வாடி வழித்தடத்தில் இயக்கப்படும். பெங்களூரு கிழக்கு, கே.எஸ்.ஆர்., பெங்களூரு ஸ்டேஷன்களுக்கு செல்லாது. கோவை-மும்பை எல்.டி.டி., எக்ஸ்பிரஸ், டிச., 1 ல், பனஸ்வாடி, யஸ்வந்த்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும். கே.எஸ்.ஆர்., பெங்களூரு ஸ்டேஷனுக்கு செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை