உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேருக்கு பூட்டிய கால்கள்; கோவில் பந்தல் அகற்றம்

தேருக்கு பூட்டிய கால்கள்; கோவில் பந்தல் அகற்றம்

ஓமலுார் : சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஒரு பிரிவினர் வழிபட, மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பு இடையே கலவரம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, 28 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு திருவிழா நேற்று நிறைவு பெற வேண்டும். ஆனால் கலவரத்தால் திருவிழா ரத்து செய்யப்பட்டது.நேற்று கோவில் முன் போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. தொடர்ந்து தேரில் கட்டப்பட்ட கால்கள் கழற்றப்பட்டன. இருப்பினும் கோவில் வளாகம் உள்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், போலீசாரும், தீயணைப்புத்துறை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று, நச்சனம்பட்டி காலனியை சேர்ந்த விக்னேஷ்வரன், 22, தீவட்டிப்பட்டி, கீழவீதியை சேர்ந்த அரவிந்த், 26, ஆகியோரை, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை