உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முட்டைக்கோழி தட்டுப்பாடு எதிரொலி கொள்முதல் விலை கிடுகிடு உயர்வு

முட்டைக்கோழி தட்டுப்பாடு எதிரொலி கொள்முதல் விலை கிடுகிடு உயர்வு

நாமக்கல், முட்டைக்கோழி தட்டுப்பாடால், கொள்முதல் விலை, 'கிடுகிடு'வென உயர்ந்து, 133 ரூபாயை எட்டியதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன்பின், இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும், 25 லட்சம் முட்டைக்கோழிகள், கர்நாடகா, கேரளா மாநிலத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு(நெக்), வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். முட்டை விலை உயரும்போது, முட்டைக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில், 85-90 வாரம் வரை வைத்திருந்து விற்பனை செய்யப்படும்.மேலும், முட்டை விலை குறையும்போது, 75 வாரத்திலேயே விற்பனை செய்துவிடுவர். முட்டை விலை வரலாறு காணாத வகையில், 610 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், முட்டைக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும், 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது.அதன்படி, கடந்த, 1ல், கொள்முதல் விலை, 108 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. 10ல், 112, 20ல், 122, 22ல், 132, 24ல், 133 என, படிப்படியாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி