உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஸ்வின்ஸில் தயாராகும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்

அஸ்வின்ஸில் தயாராகும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்

அஸ்வின்ஸில் தயாராகும்'கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக்'சேலம், டிச. 8-வரும், 25ல், கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சேலம் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சார்பில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்தார். தலைமை செயல் அலுவலர் அஸ்வின், நிர்வாகத்தினர் சிபி, நிர்வாக இயக்குனர் நிஷா, 'கேக்' தயாரிப்பு பணியை தொடங்கி வைத்தனர்.செர்ரி, உலர் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரிகாட், டியூட்டி புரூட்டிச், பேரீச்சம்பழம் ஆகிய சத்தான பழங்கள், ஜாதிக்காய் பொடி, லவங்கப்பட்டை பொடி போன்றவற்றை கலந்து, ஓரிரு மாதங்களுக்கு முன், ஒயினில் ஊற வைக்கப்பட்டுள்ளன.இந்த புரூட்ஸ் நன்றாக ஊறிய பின், சுவையான தரமான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படும். கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குக்கீஸ், சாக்லேட், புட்டிங் ஆகிய கேக்குகள் செய்யப்பட்டு வருகின்றன. சேலம் ராமகிருஷ்ணா சாலை, அழகாபுரம், பட்டைக்கோவில், குகை உள்ளிட்ட அனைத்து அஸ்வின்ஸ் பேக்கரி கிளைகளிலும், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கேக் வகைகள் விற்பனைக்கு கிடைக்கும் என, கணேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை