| ADDED : ஜூன் 29, 2024 02:01 AM
தலைவாசல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்பாடியை சேர்ந்த கலியபெருமாள் மனைவி இந்திராகாந்தி, 54. சேலம் மாவட்டம் தலைவாசல், வி.கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார்.நேற்று காலை, 6:30 மணிக்கு பாக்கம்பாடியில் இருந்து, பஸ்சில் வந்த அவர், வி.கூட்ரோடு ஸ்டாப்பில் இறங்கினார். அப்போது சின்னசேலம், அம்மையகரத்தை சேர்ந்த ராமலிங்கம், 45, ஓட்டி வந்த 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டில், இந்திராகாந்தி ஏறி கல்லுாரிக்கு புறப்பட்டார்.அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி எதிரே சென்றபோது, 'சேஸ்' மட்டும் உள்ள வண்டி, மொபட் மீது மோதியது. இதில் இந்திராகாந்தி உயிரிழந்தார். ராமலிங்கம் படுகாயமடைந்து ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைவாசல் போலீசார், சேஸ் மட்டும் உள்ள வண்டி டிரைவரான, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சீதாராமன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ஒருவர் பலிகாடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து, 35 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடந்த, 25 இரவு, 11:00 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. அதில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார். அப்போது அந்த வழியே, மொபட்டில் வந்த, சிக்கனம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் புகார்படி, ஓமலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.