துாய்மை பணியாளருக்கு ரூ.10,000 ஊதியம் தேவை
சேலம், தமிழ்நாடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர், துாய்மை காவலர்கள், துாய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில் உறுப்பினர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய கோரிக்கை மனு விபரம்:சேலம் மாவட்ட கிராம ஊராட்சிகளில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக டேங்க் ஆப்ரேட்டராக பணியாற்றுவோருக்கு, சீரான ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு அரசு அறிவித்தப்படி, 7 வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை கணக்கீடு செய்து தர வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில், 10 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தம் செய்திட வேண்டும். 3 ஆண்டு பணி முடித்த துாய்மை பணியாளருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல். கிராம ஊராட்சியில், 10 ஆண்டு பணிமுடித்த துாய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து 10,000 ரூபாய் ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.