உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவை-ஹிசார் ரயில் நேரம் மாற்றம்

கோவை-ஹிசார் ரயில் நேரம் மாற்றம்

சேலம் : கோவை-ஹிசார் வார ரயில் கிளம்பும் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:ரயில்களில் அதிகரிக்கப்படும் வேகம், நேரம் குறைப்பு உள்ளிட்டவைகளால், அவ்வப்போது ரயில் இயக்கங்களின் நேரம் மாற்றியமைக்கப்படுகின்றன. ஜூன் 10 முதல், அக்., 31 வரை இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை-ஹிசார் வார ரயில் கிளம்பும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோவை-ஹிசார் வார ரயில், தற்போது சனிக்கிழமைகளில் மதியம், 2:55 மணிக்கு கிளம்பி, திங்கள் மாலை, 4:00 மணிக்கு ஹிசார் சென்றடையும். ஜூன் 10 முதல் இந்த ரயில் மதியம், 1:30 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை