மேலும் செய்திகள்
கல்லுாரி பஸ் மீது கார் மோதியதில் ஒருவர் காயம்
20-Nov-2024
ஆத்துார்: பெரம்பலுாரில் உள்ள தனியார் கல்லுாரி பஸ், நேற்று மதியம், 3:00 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்துார் நோக்கி, 5 மாணவியருடன் வந்துகொண்டிருந்தது. ஆத்துார் அருகே, துலுக்கனுார் ஏரிக்கரை சாலை வளைவில் வந்தபோது, எதிரே வந்த, 'ஸ்விப்ட்' கார் மற்றும் சரக்கு வேன் மீது, கல்லுாரி பஸ் மோதி விபத்துக்குள்ளானது.இதில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தை உடைத்து பஸ் நின்றது. கார், ஏரி பள்ளத்தில் சாய்ந்தது. கட்டுமான பொருட்களுடன் வந்த சரக்கு வேன், சாலையில் கவிழ்ந்தது.வேனை ஓட்டி வந்த, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ், 35, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வராஜ், 42, கார் டிரைவரான வீரகனுார் சீனிவாசன், 43, ஆத்துாரை சேர்ந்த, பஸ் டிரைவர் சந்திரன், 39, மற்றும், 5 மாணவியர் உள்பட 11 பேர் காயத்துடன் தப்பினர். காரில் வந்த, 3 பேர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.சீரமைப்புவிபத்தில் மின் கம்பம் துண்டானதும், ஒயர்கள் சாலையோரம் தொங்கின. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
20-Nov-2024