மேலும் செய்திகள்
ஏரி நீரில் மூழ்கி தொழிலாளி பலி
11-Sep-2024
சேலம்: சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்தவர் பானுமதி. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் நங்கவள்ளி ஒன்றிய குழு தலைவியாக உள்ளார். அவர், சேலம் எஸ்.பி., கவுதம் கோயலிடம் நேற்று அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:சேலம் மாவட்டம், பனிக்கனுாரில் எனக்கு, 5.15 ஏக்கர் நிலம் உள்ளது. அருகே கிஷோர் என்பவருக்கு, 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதை, தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன் விலை பேசி ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மணிகண்டன், நடுவனேரி ஊராட்சி தலைவராக உள்ள, தி.மு.க.,வை சேர்ந்த அவரது தந்தை முருகன் ஆகியோர், 200க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் அத்துமீறி எனக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் நிலத்தை, பொக்லைன் மூலம் நிரவி கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.அங்கு சென்று பார்த்தபோது, போலீசாரின் உதவியோடு நடப்பதை தெரிந்து, போராட்டத்தில் ஈடுபட்டேன். இதுகுறித்து கேட்டதற்கு மணிகண்டன் தகாத வார்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் என் நிலத்தில் பனை, வேம்பு உள்ளிட்ட மரங்களை அழித்ததோடு, என் சொந்த நிலத்தில் அத்துமீறி கம்பி வேலி அமைத்துள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், ''இந்த நிலத்துக்கும், அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டுமென்றே பொய் புகார் தெரிவித்துள்ளனர். தலைவி மீது நான் நங்கவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளேன். இருக்கும் நிலத்துக்கும், நாங்கள் இருக்கும் வீட்டுக்கும், 40 கி.மீ., உள்ளது. நாங்கள் எந்த அடியாட்களையும் அழைத்து வரவில்லை. வேண்டுமென்றே என் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர்,'' என்றார்.மணிகண்டனின் தந்தை முருகன் கூறுகையில், ''இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல். நாங்கள் வைத்திருக்கும் நிலத்துக்கு, 1 கோடி ரூபாய் கேட்டார்கள். எதற்கு உங்களுக்கு தர வேண்டும் என கேட்டேன். மேலும் பணத்தை தர முடியாது என கூறினேன். இதனால் நாடகமாடி புகார் தெரிவித்துள்ளனர்,'' என்றார்.
11-Sep-2024