குழந்தை பலியால் மோதல்: தந்தை உள்பட 3 பேர் கைது
சேலம்: சேலம், 3 ரோட்டை சேர்ந்தவர் சந்தானபாரதி, 31. இவரது மனைவி மோனிஷா. இவருக்கு கடந்த, 6ல், தனியார் மருத்துவம-னையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் உடல் நலக்கு-றைவால், 16ல் உயிரிழந்தது. சரியாக கவனிக்காததால் இறந்து-விட்டதாக கூறி சந்தான பாரதி குடும்பத்தினரிடம், மோனி-ஷாவின் உறவினர்கள் ரவிச்சந்திரன், 23, உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து சந்தானபா-ரதி சகோதரர் வெங்கடேஷ்பிரசாத்தை, இரும்பு கம்பியால் தாக்கி-யுள்ளனர். அவர் காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார்.இதையடுத்து சந்தானபாரதி, அவரது நண்பர் வசந்த், 21, உள்ளிட்டோர், மோனிஷாவின் உறவினர் புருஷோத் என்பவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் இரு தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ரவிச்சந்திரன், சந்தானபாரதி, வசந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடுகின்றனர்.