உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 7ல் நெல்லையில் மாநாடு காங்., தங்கபாலு அழைப்பு

7ல் நெல்லையில் மாநாடு காங்., தங்கபாலு அழைப்பு

சேலம், நெல்லை மாநில மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், சேலம் மாநகர் காங்., அலுவலகத்தில், நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.அதில் மாநில முன்னாள் தலைவர் தங்கபாலு பேசியதாவது:தேர்தல் கமிஷனை தவறாக பயன்படுத்தி, மகாராஷ்டிரா, அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும். அதனால் ஓட்டு திருட்டு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நெல்லையில் வரும், 7ல் நடக்க உள்ள மாநில மாநாட்டில் சேலம் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை