உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொடர்ந்து ஆட்சியை பிடிக்கவே தொகுதி மறுவரையறை திட்டம்: சுற்றுலா அமைச்சர் சாடல்

தொடர்ந்து ஆட்சியை பிடிக்கவே தொகுதி மறுவரையறை திட்டம்: சுற்றுலா அமைச்சர் சாடல்

சேலம்: ''தொடர்ந்து ஆட்சியை பிடிக்கவே, தொகுதி மறுவரையறை திட்-டத்தை செயல்படுத்த, மத்திய பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது,'' என, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் குற்றம்சாட்-டினார்.இதுகுறித்து சேலத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்து, தமிழக பிரதிநி-தித்துவத்தை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை, தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் உள்பட, 18 மாநிலங்களை பற்றி கவலைப்படாமல், வடமாநிலங்களில், 80 சதவீதம் வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியை பிடிக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு மாநில முதல்வர், கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து ஏற்படுத்திய ஒருங்கிணைப்பு கூட்டு நடவடிக்கை குழு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையேதான் போட்டி. அ.தி.மு.க.,வுடன் கூட்-டணி பேச்சு நடந்து வருவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் இரு கட்சிகளுக்கும் இரு ஆண்-டாக ரகசிய உறவு இருப்பது நிரூபணமாகி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.எதன் அடிப்படையில்?''எதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும் என இதுவரை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை,'' என, சேலம் எம்.பி., செல்வகணபதி குற்றம்சாட்டினார்.இதுதொடர்பாக அவர், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்-டுள்ளது. தொகுதி சீரமைப்பு எதன் அடிப்படையில் செய்யப்-படும் என்பதை, இதுவரை தெளிவுபடுத்தவில்லை. எண்ணிக்கை குறைந்தால், தமிழக வளர்ச்சி பெருமளவு பாதிக்கும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை