உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூட்டுறவு சங்கத்தில் மோசடி காசாளருக்கு 2 ஆண்டு சிறை

கூட்டுறவு சங்கத்தில் மோசடி காசாளருக்கு 2 ஆண்டு சிறை

சேலம்:சேலம் சீலாவாரி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் கணக்காளராக இருந்துள்ளார். இவர், 2006 பிப்., 1 முதல், 2006, செப்.,1 வரை செயலராக கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது, அங்கு காசாளராக இருந்த ஆறுமுகம், 55, என்பவருடன் சேர்ந்து, ரூ.2.05 லட்சம் கையாடல் செய்துள்ளார்.இதுகுறித்து சேலம் விஜிலென்ஸ் போலீசார், 2008 பிப்., 14ல், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில், சீனிவாசன் இறந்துவிட்டதால், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆறுமுகத்துக்கு, இரண்டு ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தங்கராஜ் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை