உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொப்பரை கிலோ ரூ.243 ஆக உயர்வு

கொப்பரை கிலோ ரூ.243 ஆக உயர்வு

ஓமலுார் :ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 202 மூட்டைகளில் கொண்டு வந்தனர். வியாபாரிகள், ஒரு கிலோ கொப்பரையை, அதிகபட்சமாக, 243.69 ரூபாய்க்கு கோரினர். 77.04 குவிண்டால் மூலம், 17.88 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த, 20ல் நடந்த ஏலத்தில், அதிகபட்சமாக கிலோ, 233.06 ரூபாய்க்கு ஏலம்போன நிலையில், இந்த வாரம், 10 ரூபாய் உயர்ந்தது.அதேபோல் சேலம், உத்தம சோழபுரத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. கிலோ, 200 முதல், 245 ரூபாய் வரை விலைபோனது. 17.82 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ