உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி

புகைப்படம் எடுக்க சென்றபோது காதல் மலர்ந்ததால் திருமணம் செய்த ஜோடி

ஆத்துார்: புகைப்படம் எடுக்கச் சென்றபோது, காதல் மலர்ந்ததால் திரு-மணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அத்தனுாரை சேர்ந்த செங்-கோடன் மகன் பிரகாஷ், 29. இவர் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, ஸ்டூடியோ வைத்துள்ளார். தலைவாசல் அருகே, தேவியாக்குறிச்-சியை சேர்ந்த செல்வகுமார் மகள் சினேகா, 22. பி.எஸ்.சி., முடித்-துவிட்டு வீட்டில் இருந்தார். சினேகா, சேலம் தனியார் நர்சிங் கல்-லுாரியில் படித்தபோது, அங்கு புகைப்படம் எடுக்க சென்ற பிரகாஷூடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், பிரகாஷ் தனது நண்பன் சிகிச்சைக்கு, சேலம் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு பயிற்சியில் இருந்த சினேகாவுடன், மீண்டும் பழக்கம் ஏற்-பட்டு காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோரும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஜன., 31ல், வீட்டை விட்டு வெளி-யேறி, நேற்று சேலம் சித்தர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இரு-வீட்டு பெற்றோரையும் அழைத்து, மகளிர் போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். இத்திருமணத்தை சினேகாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. காதல் திருமணம் செய்த பிரகாஷூடன் சினேகாவைபோலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை