உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / களி படைத்து விவசாயிகள் வழிபாடு

களி படைத்து விவசாயிகள் வழிபாடு

வீரபாண்டி: இளம்பிள்ளை அருகே சித்தர்கோவிலில், கடந்த ஏப்., 28ல் விநாயகர் புறப்பாடுடன் நடப்பாண்டு சித்தர் சிறப்பு எனும் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் சித்தர்கோவில் மூலவர் சித்தேஸ்வரருக்கு சந்தன காப்பு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. மூலவருக்கு, 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து சர்வ அலங்காரத்தில் பொங்கல், பாரம்பரிய களி படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள், அவரவர் நிலங்களில் விளைந்த அவரை கொட்டை, தேங்காய், ராகி, வெல்லம் உள்ளிட்டவையால், கோவில் முன் விறகு அடுப்பில் இனிப்பு 'களி' செய்து, அரிசி, பருப்பு, காய்கறியால் பொங்கல், சாம்பார் வைத்து கோவிலுக்கு எடுத்து வந்து படையல் வைத்து வழிபட்டனர். இப்படி செய்தால் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து நல்ல வளம் பெறுவார்கள் என்பது, விவசாயிகளின் நம்பிக்கை.இன்று காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடக்கிறது. மதியம், 3:00 மணிக்கு சித்தர் திருவிளையாடல் நிகழ்ச்சி, 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாளை இரவு பூப்பல்லக்கு, நள்ளிரவு சத்தாபரணம் நடக்க உள்ளது. 3ல் மஞ்சள் நீர் ஊர்வலத்துடன் சித்தர் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ