அணை கசிவுநீர் துளைகளை சுத்தப்படுத்தும் பணி ஆய்வு
மேட்டூர்: மேட்டூர் அணை கட்டடத்தில் கசிவு நீரை வெளியேற்றும் துளைகளை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. அணை வலது கரை பகுதியில் அப்பணியை, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளன்குமார் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து திப்பம்பட்டி நீர்பரப்பு பகுதி அருகே, உபரி நீரேற்றும் நிலையத்தை பார்வையிட்டார். கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், மேட்டூர் அணை மேற்பார்வை பொறியாளர் வெங்கடாசலம், பொறியாளர்கள் உடனிருந்தனர்.