உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அணை முனியப்பன் கோவில் நிலம்; குத்தகையால் ரூ.33,340 வருவாய்

அணை முனியப்பன் கோவில் நிலம்; குத்தகையால் ரூ.33,340 வருவாய்

வீரபாண்டி : ஓமலுார் வட்டம் தெசவிளக்கில் உலகேஸ்வரர் கோவில், படவேட்டியம்மன், சென்றாய பெருமாள், காட்டு சென்றாய பெருமாள், வெள்ளக்கல்பட்டி சென்றாய பெருமாள், அணை முனியப்பன், தெசவிளக்கு மாரியம்மன், அணை விநாயகர், துட்டம்பட்டி மாரியம்மன் என, 9 கோவில்களுக்கு சொந்தமான, 119 ஏக்கர் நிலம், பல ஆண்டாக ஆக்கிரமிப்பில் இருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்தாண்டு நவம்பரில், 9 கோவில்களின் நிலம் மீட்கப்பட்டு தக்காரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நிலங்களை குத்தகை விட, இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. முதல் அனுமதியாக அணை முனியப்பன் கோவிலுக்கு சொந்தமான, 4.66 ஏக்கர் நிலம், 3 ஆண்டு குத்தகைக்கு நேற்று, சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ஏலம் விடப்பட்டது. அறநிலையத்துறை ஆய்வர் சரவணன்(ஓமலுார் வட்டம்), கோவில் தக்கார் சோழமாதேவி தலைமையில் நடந்த ஏலத்தில், தெசவிளக்கை சேர்ந்த பழனியப்பன், ஆண்டுக்கு, 9,600 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அடுத்தடுத்த ஆண்டுக்கு, 15 சதவீத கூடுதல் என, 3 ஆண்டுக்கு, 33,340 ரூபாய், கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை