உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருமகள் பலாத்காரம்: மாமனார் கைது

மருமகள் பலாத்காரம்: மாமனார் கைது

இடைப்பாடி: திருச்செங்கோட்டில் கூரியர் சர்வீஸ் நடத்தும் வாலிபரும், அவ-ரது, 24 வயது மனைவியும், திருச்செங்கோட்டில் வசிக்கின்றனர். அந்த பெண், கடந்த, 21ல், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள மாமனார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். 23 அதி-காலை, துாங்கிக்கொண்டிருந்த மருமகளை, அவரது மாமனாரான, 60 வயது விவசாயி, பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அவர், கணவரிடம் தெரிவித்த நிலையில், அவர் வந்து, தந்தையை தாக்கி-யுள்ளார். காயம் அடைந்த அவர், அருகே உள்ள தனியார் மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைத்து, அப்பெண், போலீசில் புகார் கொடுக்க, குடும்பத்தினர் மறுத்து-விட்டனர். இருப்பினும் நேற்று, அப்பெண் அளித்த புகார்படி, கொங்கணாபுரம் போலீசார், மாமனாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை