உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருமகளை காணவில்லை 5 மாதத்துக்கு பின் புகார்

மருமகளை காணவில்லை 5 மாதத்துக்கு பின் புகார்

ஓமலுார்:ஐந்து மாதங்களுக்கு பின், மருமகளை காணவில்லை என, மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஓமலுார் அருகே செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன், 27. இவர், கோவையில் தனியார் பார்சல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மனைவி நந்தினி, 24. நான்கு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த, 2024 நவ.,5ல் வீட்டில் இருந்த நந்தினி காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று நந்தினியின் மாமியார் வளர்மதி, தனது மருமகளை கண்டுபிடித்து தருமாறு, ஓமலுார் போலீசில் புகார் அளித்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு பின் மருமகளை காணவில்லை என, புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ