உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்தூரில் மஞ்சள் ஏலம் ரூ.80 லட்சம் வர்த்தகம்

ஆத்தூரில் மஞ்சள் ஏலம் ரூ.80 லட்சம் வர்த்தகம்

ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த ஏலத்தில், 2,100 மஞ்சள் மூட்டை, 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் கமிஷன் மண்டிகளில் சனிக்கிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த மஞ்சள் ஏலத்தில், விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக, 5,989 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 7,452 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக, 5,669 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 6,379 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரம் நடந்த மஞ்சள் ஏலத்தை காட்டிலும், நேற்று முன்தினம் நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு, 369 ரூபாய் விலை குறைந்தும், உருண்டை மஞ்சள் குவிண்டாலுக்கு, 370 ரூபாய் விலை அதிகரித்ததும் விற்பனையானது. நேற்று முன்தினம் நடந்த ஏலத்துக்கு, மஞ்சள் மூட்டை வரத்து குறைந்து, 2,100 மஞ்சள் மூட்டைகள், 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. விரலி மஞ்சள் விலை சரிவை நோக்கிச் சென்றதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி