உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுதந்திர தின விழாவில் ரூ.6.72 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவி வழங்கல்

சுதந்திர தின விழாவில் ரூ.6.72 லட்சம் மதிப்பில்நலத்திட்ட உதவி வழங்கல்

சேலம்: சேலத்தில், இன்று நடக்கும் சுதந்திர தின விழாவில், ரூ.6.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் வழங்குகிறார். சேலம் காந்தி ஸ்டேடியத்தில், 65வது சுதந்திர தின விழா இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மகரபூஷணம் தேசியக் கொடியேற்றுகிறார். தொடர்ந்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்த பின், 36 போலீஸாருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 41 பயனாளிகளுக்கு ஆறு லட்சத்து 72 ஆயிரத்து 466 ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாவட்ட போலீஸ் எஸ்.பி., மாநகர போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ