உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காதலி மீது ஆசிட் வீச்சு: கைதான வாலிபர் பற்றி "திடுக் தகவல் அம்பலம்

காதலி மீது ஆசிட் வீச்சு: கைதான வாலிபர் பற்றி "திடுக் தகவல் அம்பலம்

சேலம் : இரும்பாலை எம்.பி.எஸ்., நகரை சேர்ந்த அங்கையற்கண்ணி மகள் ஜோதிலட்சுமி (22). பி.சி.ஏ.,பட்டதாரியான இவரும், அதே பகுதியை சேர்ந்த சத்தியசிவன் (27) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். õதலுக்கு, ஜோதிலட்சுமியின் தாய் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், காதலன் சந்திப்பை அறவே தவிர்த்த ஜோதிலட்சுமி, தன்னை மறந்துவிடும்படி காதலனிடம் தெரிவித்துள்ளார். இதனால், சத்தியசிவன் நண்பர்களுடன் சேர்ந்து, ஜோதிலட்சுமியின் முகத்தில் ஆசிட் வீசினார். இதில், முகம் கருகிய ஜோதிலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, இரும்பாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சத்தியசிவனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், கடந்த ஓராண்டாக ஜோதிலட்சுமி, என்னுடன் பேசவில்லை. அதனால், சங்ககிரி அடுத்த ஏகாபுரம் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண்ணை காதலித்தேன். அவரை கடந்த டிசம்பர் 3ம் தேதி, கொண்டப்பநாயக்கன்பட்டி முருகன் கோவிலில் திருமணம் செய்து, முறைப்படி பதிவு செய்து கொண்டேன். இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியாமல் இத்திருமணம் ரகசியமாக நடந்தது. அதே நேரத்தில், ஜோதிலட்சுமியை பழிவாங்க திட்டமிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து அவர் மீது ஆசிட் வீசினேன், என்று சத்திய சிவன் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதையடுத்து, அதோடு, ஆசிட் வீச்சுக்கு உடந்தையாக இருந்த, ஓமலூரை சேர்ந்த திலீப் (26) என்பவரையும் நேற்று கைது செய்தனர். 2008ல் இரும்பாலை பகுதியில் வழிப்பறி செய்த வழக்கு, இவர் மீது நிலுவையில் உள்ளது. அஞ்சல் வழியில், எம்.சி.ஏ.,படித்து வரும் திலீபை, ரவுடிகள் பட்டியலில் சேர்க்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி