சேலம்,: நாடு முழுதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கு, 'நீட்' நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில், 23 மையங்களில் நடந்தது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், 11,144 பேர். அவர்களில் அரசு பள்ளி மாணவர்கள், 223; மாணவியர், 769 பேர் அடங்கும். காலை, 10:00 மணி முதல், மாணவ, மாணவியர் மையத்தில் திரண்டனர். அவர்கள், 'மெட்டல் டிெடக்டர்' கருவி மூலம் சோதனைக்கு உட்படுத்திய பின், 11:00 மணி முதல், மைய வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களது அனுமதி சீட்டு, ஆதார், புகைப்படம் ஆகியவை ஒப்பிட்டு சரிபார்த்த பின், மதியம், 1:30 மணி வரை தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஏற்கனவே அறிவித்தபடி எலக்ட்ரானிக் பேனா, ைஹ ஹீல்ஸ் செப்பல், மொபைல், பிளாஸ்டிக் பவுச் உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவியர் கம்மலை கழற்றிவிட்டு, தேர்வு எழுத சென்றனர். விதிமுறைப்படி மாணவர்கள் எல்லோரும் அரைக்கை சட்டை அணிந்திருந்தனர். மதியம், 2:00 முதல், மாலை, 5:20 மணி வரை தேர்வு நடந்தது. இதில், 10,793 பேர் தேர்வு எழுதினர். இது, 96.9 சதவீதம். 351 பேர் தேர்வுக்கு வரவில்லை. இது, 3.14 சதவீதம்.