உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தி.மு.க., மத்திய மாவட்ட நிர்வாகிகள்;கோவை மாநாட்டில் பங்கேற்க முடிவு

தி.மு.க., மத்திய மாவட்ட நிர்வாகிகள்;கோவை மாநாட்டில் பங்கேற்க முடிவு

சேலம்:தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், கலைஞர் மாளிகையில் நேற்று நடந்தது. அவைத்தலைவர் சுபாசு தலைமை வகித்தார். அதில், மத்திய மாவட்ட தி.மு.க., செயலரான, அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.தொடர்ந்து அக்., 12ல், கோவையில் மாநில இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் நடக்க உள்ள இளைஞர் அணி மண்டல மாநாட்டில், சேலம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்; வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் இளைஞர் அணி, வக்கீல் அணியினர் சிறப்பாக செயல்படுதல் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேயர் ராமச்சந்திரன், பொருளாளர் கார்த்திகேயன், மாநில இளைஞரணி துணை செயலர் ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !