உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டுமான பணியாளருக்கு தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்

கட்டுமான பணியாளருக்கு தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்

ஆத்துார் ஆத்துார் நகராட்சி, 18வது வார்டு வழியாக செல்லும் நீரோடை பகுதியில், 51 லட்சம் ரூபாயில், புதிதாக உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பணியை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் சிவில் இன்ஜினியர் கண்ணன், நேற்று ஆத்துார் டவுன் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ள விபரம்:சென்னை கட்டுமான நிறுவனம் சார்பில், 'டெண்டர்' எடுத்து, நீரோடை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. பணியின் மேற்பார்வையாளராக பணிபுரிகிறேன். எங்களது கட்டுமான நிறுவன உரிமையாளரிடம், தி.மு.க.,வை சேர்ந்த 18வது வார்டு கவுன்சிலர் கங்கையம்மாளின் கணவர் ரவி, கமிஷன் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.இது தராத காரணத்தால், பாலம் கட்டுமான பணியை தொடர்ந்து செய்யவிடாமல் இடையூறு செய்வதுடன், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் பேசி வருகிறார். புகார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, தி.மு.க., கவுன்சிலரின் கணவர் ரவி கூறுகையில், 'பாலம் கட்டுமான பணியை தாமதமாக மேற்கொள்வதுடன், நீரோடை கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கழிவுநீரை வெளியேற்றும்படி கூறினேன். நான், இப்பணிக்கு கமிஷன் எதுவும் கேட்கவில்லை. என் மீது பொய்யான தகவல் கூறுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை