தி.மு.க., கொடி கம்பம் அகற்றநகராட்சி அலுவலகம் முற்றுகை
இடங்கணசாலைபா.ஜ., கட்சியினர், இடங்கணசாலை நகர தலைவி கலைச்செல்வி தலைமையில், நேற்று காலை, அங்குள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:சித்தர்கோவில் அடிவாரத்தில், 3 சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக, தி.மு.க., கட்சியின், 100 அடி உயர கொடி கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலை உள்ளது.அதனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடி கம்பத்தை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து கமிஷனர் பவித்ராவிடம், மனு அளித்தனர்.