பூமி பூஜை போட்டும் கழிப்பிடம் கட்டல...
சேலம், டிச. 24-சேலம், வீரகனுார் பேரூராட்சி, 1வது வார்டு மக்கள் ஒருசேர திரண்டு, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பின் கூறியதாவது:முதலாவது வார்டுக்கு உட்பட்ட தேவேந்திர குல வேளாளர் தெரு, ராயர்பாளையத்தில், 55 குடும்பங்களில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அடிப்படை தேவையான கழிப்பிடம் கட்ட, 20 நாட்களுக்கு முன், பூமிபூஜை போடப்பட்டது. ஆனால் இதுவரை, அதற்கான கட்டுமானபணி தொடங்கவில்லை. குறிப்பிட்ட சிலர் தடுப்பதாக கூறி, கட்டுமானத்தை தொடங்காமல் பேரூராட்சி நிர்வாகமும் காலம் கடத்தி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, குறிப்பிட்ட பகுதியில் கழிப்பிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.செயலர் அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், ''குறிப்பிட்ட தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், கட்டுமானம் தொடங்கவில்லை. இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,'' என்றார்.