மேலும் செய்திகள்
அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம்
01-Apr-2025
ஆத்துார்: ஆத்துார், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா, விநாயகர் பூஜை, கணபதி ேஹாமத்-துடன் நேற்று தொடங்கியது. இன்று காப்பு கட்டுதல், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 2ல் திருவிளக்கு பூஜை; 6ல் தீர்த்தக்குட ஊர்வலம்; 9ல், மஹா சாந்தி ேஹாமம்; 13ல் பால் குட ஊர்வலம்; 14ல், அம்மன் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. தொடர்ந்து, 15ல் பகாசூர வதம், பீமன் மங்கள முனிக்கு சோறு கொடுத்தல்; 16ல் அரவான் பலி, அர்ஜூனன் வில் அம்பு எடுத்தல், 3 சிறு தேர்களில் சுவாமி தேரோட்டம், திரவுபதி அம்ம-னுக்கு தீ மிதித்தல், அம்மன் தேருக்கு எழுந்தருளல்; 17ல் தர்மர் பட்டாபி ேஷகம், அம்மன் தேர் வடம் பிடித்தல்; 18ல் சப்தாவ-ரணம்; 19ல் வசந்த உற்சவம்; 20ல் போர் மன்னன் பூஜையுடன் திருவிழா முடியும். விழா ஏற்பாடுகளை, ஆத்துார் துளுவ வேளாளர் மகாஜன மன்றத்தினர் மேற்கொள்கின்றனர்.
01-Apr-2025