உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஸ்டாப்பில் நிற்காமல் பஸ் சென்றால் டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து

ஸ்டாப்பில் நிற்காமல் பஸ் சென்றால் டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து

ஆத்துார், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப்புகளில், தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என, அப்பகுதி மக்கள், முதல்வர் தனிப்பிரிவுக்கு, கடந்த மே மாதம் புகார் அனுப்பினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு(ஆர்.டி.ஓ.,), உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஆர்.டிஓ., தாமோதரன் விசாரித்து, பதில் தபால் அனுப்பியுள்ளார். அதில், 'மோட்டார் வாகன ஆய்வாளர் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கப்பட்டது. அப்படி சென்ற டிரைவர், கண்டக்டர்களை, வட்டார போக்குவரத்து அலுவலகம் வரவழைத்து விசாரித்து, 'இதுபோன்ற புகார் வரக்கூடாது. மீண்டும் வந்தால், டிரைவர், கண்டக்டர் உரிமம் ரத்து செய்யப்படும்' என, எச்சரித்து, மன்னிப்பு கடிதம் பெறப்பட்டுள்ளது. மேலும், பஸ் ஸ்டாப்புகளில் நின்று செல்லாத பஸ்கள் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ