உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே, 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த டிரைவர் பெருமாள்,40; இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். டிரைவர் தொழில் மற்றும் விறகு உடைக்கும் கூலி வேலை செய்து வந்தார்.இந்த நிலையில், தர்மபுரி அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த, சிறுமிகளின் பெற்றோர் நேற்று அதியமான்கோட்டை போலீசில் நேற்று புகார் அளித்தனர். அதில், பெருமாள், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்தனர். மேலும், சைல்டு ஹெல்ப்லைன் எண்ணிற்கும் புகார் அளித்தனர். புகார் குறித்து, அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் லதா நேற்று பெருமாளை கைது செய்து விசாரித்தார்.மேலும், பெருமாள் மீது கடந்த ஓராண்டிற்கு முன், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், சிறுமிகளின் பெற்றோரிடம் சைல்ட் ஹெல்ப் லைன் சூப்பர்வைசர் ஜோதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். பாலியல் தொல்லை குறித்த சம்பவங்கள் தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில், 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டது தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை