லாரிகள் மோதியதில் டிரைவர் உயிரிழப்பு
சேலம்: அம்மாபேட்டை அருகே, லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மூவர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டியன், 24, டிரைவர். நேற்று முன்தினம் மணப்பாறையில் இருந்து, சரக்கு லாரியில் ஏ.டி.எம். மிஷினை ஏற்றிக்கொண்டு, தர்மபுரி வந்து கொண்டிருந்தார். லாரியில் பாரதி, 18, சதிஷ்குமார், 28. ஆகியோரும் வந்தனர். மாசிநாயக்கன்பட்டி பாலத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு வந்தபோது, ராசிபுரத்தில் இருந்து நெய்வேலி நோக்கி, டாரஸ் லாரியை திருச்செங்கோடு மொளசியை சேர்ந்த சுப்பிரமணி, 47, என்பவர் தவறான பாதையில் ஓட்டி வந்து சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில், சரக்கு லாரி ஓட்டி வந்த டிரைவர் ராஜபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாரதி, சதீஷ்குமார், டாரஸ் லாரி டிரைவர் சுப்பிரமணி ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த மூவரையும் அம்மாபேட்டை போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.