உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தால் சிக்கிய மண் கடத்தல் லாரிகள்

விபத்தால் சிக்கிய மண் கடத்தல் லாரிகள்

வாழப்பாடி, வாழப்பாடி அருகே சேத்துக்குட்டையில் இருந்து நேற்று மேட்டுப்பட்டி நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரின் பின்புறம், அதிவேகமாக வந்த லாரி மோதியது. கார் கதவு உடைந்தது. அப்போது மற்றொரு லாரியும் வந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் திரண்டு, இரு லாரிகளையும் மடக்கி விசாரித்ததில், வெள்ளாளகுண்டத்தில் இருந்து லாரிகளில் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதை அறிந்த, வாழப்பாடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து வாழப்பாடி மண்டல துணை தாசில்தார் ராஜா, இரு லாரிகளையும் பிடித்து போலீசில் ஒப்படைத்து, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'மேட்டுப்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளாளகுண்டம், மாசிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் கடத்தல் தினமும் இரவில் நடக்கிறது. இதுகுறித்து புகார் அளித்தாலும் வருவாய்த்துறையினர், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது விபத்தால் இரு வாகனங்கள் சிக்கியுள்ளன. இனியாவது மண் கடத்தலை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை