கவர்னரை கண்டித்துஇ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சேலம்:இ.கம்யூ., சார்பில், சேலம், கோட்டையில் உள்ள ஸ்டேட் வங்கி முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் மோகன் தலைமை வகித்தார். அதில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிராகவும், கவர்னர் ரவி செயல்படுவதாக தெரிவித்து, அவரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் தினேஷ், மாவட்ட துணை செயலர் ராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.