உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதியவர் தர்ணா: மகன்கள் மீது பகீர்

முதியவர் தர்ணா: மகன்கள் மீது பகீர்

சேலம் : சேலம், கருப்பூர், பரவக்காட்டை சேர்ந்தவர் கோபி, 65. இவர், உறவினர்களுடன் நேற்று, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார். இத னால் போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, 'முதல் மனைவிக்கு பிறந்த மகன்கள், என் சொத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். அத்துடன் கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்' என கூறினார். அதற்கு பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் கூறியும் அவர் போராட்டத்தை விடவில்லை. இதனால் அவர்களை, போலீஸ் வேனில் ஏற்றி, சேலம் டவுன் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ