மேலும் செய்திகள்
2 குழந்தைகளுடன் தாய் மாயம்
10-Jul-2025
சேலம், சேலம், பழைய சூரமங்கலம், சித்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி, 80. இவரது மனைவி ரத்தினம்மாள், 65. இவர்கள் இடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் சுப்ரமணி வீட்டில் நேற்று துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து மக்கள் தகவல்படி, சூரமங்கலம் போலீசார் சென்று பார்த்தபோது, வீட்டில் உடல் அழுகிய நிலையில் சுப்ரமணி இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'இறந்து, 2 நாட்களுக்கு மேலாகியுள்ளதால், பிரேத பரிசோதனைக்கு பின்பு தான், காரணம் குறித்து தெரியவரும்' என்றனர்.
10-Jul-2025