முதல் மாடி படியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
இடைப்பாடி, தேவூர், கோரைக்காட்டில் வசிப்பவர் பழனிசாமி, 58. இவரது, இரண்டாவது மனைவி ரத்தினம், 50. இவர்களது மகன் ஜீவா, 23. தம்பதியர், அதே பகுதியில் உள்ள தனியார் கரும்பாலையில் பணிபுரிந்தனர். ஜீவாவும், அங்கு டிராக்டர் டிரைவராக பணிபுரிகிறார். இவர்கள் கோரைக்காட்டில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.அந்த வீட்டின், முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டில், கைப்பிடி சுவர் இன்னும் வைக்கவில்லை. இந்நிலையில் கடந்த, 15 இரவு, ரத்தினம், மாடிக்கு சென்று துாங்கினார். நள்ளிரவில் இயற்கை உபாதைக்கு படிக்கட்டில் இருந்து இறங்கியபோது, தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த பழனிசாமி, மனைவியை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.மேல் சிகிச்சைக்கு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஜீவா புகார்படி தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.