மேலும் செய்திகள்
விபத்தில் ரேஷன் ஊழியர் பலி
13-Jul-2025
சேலம், சேலம், மணியனுார் காளியம்மன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவரது மனைவி வள்ளியம்மாள், 75. இவர் அந்த பகுதியில் உள்ள நுால் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, காளியம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் பிடிக்க சென்றார். அப்போது அங்கு தண்ணீர் இல்லாததால் மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13-Jul-2025