/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உறவினர் ஈமக்காரியத்துக்கு வந்தபோது காவிரியில் மூழ்கி எலக்ட்ரீஷியன் பலி
உறவினர் ஈமக்காரியத்துக்கு வந்தபோது காவிரியில் மூழ்கி எலக்ட்ரீஷியன் பலி
இடைப்பாடி:காளிப்பட்டி அருகே கோணங்கிபாளையத்தை சேர்ந்த, வெங்கட் மகன் விஜயன், 20. திருமணம் ஆகாத இவர், எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார். இவரது அத்தை மகன் விஜயகுமார், 4 நாட்களுக்கு முன் இறந்தார். இவரது ஈமக்காரியத்துக்கு, விஜயன் உள்பட பலர், நேற்று மதியம், 3:30 மணிக்கு இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றிற்கு வந்தனர். அப்போது விஜயன், அவரது நண்பர் ராசுகுட்டி ஆகியோர், ஆற்றின் இக்கரையில் இருந்து, 300 அடி துாரத்தில் உள்ள அக்கரைக்கு சென்று விட்டு, மீண்டும் திரும்பலாம் என கூறி நீந்திச்சென்றனர். 200 அடி துாரம் சென்றதும், நீந்த முடியாமல் விஜயன் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் தகவல்படி, இடைப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, உள்ளூர் மீன் பிடிக்கும் நபர்களுடன் சேர்ந்து, விஜயனை சடலமாக மீட்டனர். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.